Site hosted by Angelfire.com: Build your free website today!


எனது கிறுக்கல்கள் வெறும் வார்த்தைகள் தான்.. விரைவாக வந்து வாசித்து விடு.. கவிதைகள் ஆகட்டும்
Home | ப்ரியமுடன் காதலி | நட்புக்காக | இதர கவிதைத் துளிகள் | Downloads

எனது கைபேசி

ஒவ்வொரு முறை அலறி துடிக்கும் போதும்

எடுத்து பார்க்கிறேன்..

நீயாக இருக்குமோ..

எப்போதும் ஏமாற்றமே எனக்கு..

உன் பெயர் வரும் நாள் பார்த்து

என்னை விட என் கைபேசி

காத்திருகிறது கண்ணீருடன்


உன் உதட்டில் மலரும் புன்னகை..

என் எல்லாவற்றையும்

தோற்கடித்து விடுகிறது..

உனக்கென்று தோற்பதில்

உள்ள ஆனந்தம்

இப்போது புரிகிறது...


மண்ணை பார்த்தே நடந்து செல்லும்

உன் கண்களை பார்க்கும் யோகம்

எப்போது எனக்கு கிட்டும்..

உன் விழிகள் பார்க்காமலே

உனக்குள் தொலைந்து,

இதயத்தை இழந்து

ஏழை ஆகி விட்டேன்.

என் இதயத்தை உன்னில் தொலைத்து விட்டு

உனது கால் தடங்களில் கண் வைத்து காத்திருக்கிறேன்..

தேடல் இப்போது தீர்ந்து போய்

காதல் கண்களை மறைத்து விட்டது..

தொலைத்துவிட்ட இதயம்

எனக்கு என்றில்லாமல்

அவளுக்காக துடிப்பதை உணர்கிறேன்

நீ கண் அயர்ந்து தூங்கும் போது..

என் தூக்கம் தொலைந்து விடுகிறது...

எனக்கும் சேர்த்து நீயே தூங்கி கொள்

என் விழிகள் தூக்கத்தை விட

நீ தூங்கும் அழகைத் தான் ரசிக்கின்றன..

நான் கொடுத்த ரோஜா மலர்..

நீ கசக்கி எறிந்ததால்

முள்ளாய் குத்துகிறது என் நெஞ்சில்


உள்ளங்கை ரேகைகள் அனைத்தும்

உன் பெயராக வேண்டும்

என் இதயத்தின் துடிப்பு

உன் பெயர் சொல்ல வேண்டும்

எப்போதும் நீயே என் விழிகளின்

அருகில் வேண்டும்

உன் சுவாசமே

என் மூச்சாக வேண்டும்

உன் இதயத்தில் எனக்ன்று ஒரு தனி இடம்..

இப்படி நான் கேட்கும் வரங்கள் கோடி..

நீ எப்போது வருவாய் என் வாசல் தேடி


காத்திருக்கிறேன் உனக்காக

கண்ணீருடன்

நீ எப்போது வருவாய்

உன்னை எப்போது காண்பேன்..

நீ எப்போது உணர்வாய்..

நீ இல்லாத என் வாழ்க்கையில்

பகல் என்ற ஒன்று கிடையாது என

தூக்கம் தொலைந்து

வெகு நாட்கள் ஆயிற்று

கனவு மட்டுமே வாழ்க்கை ஆனது

கனவுகளின் நாயகியாய் நீ மட்டுமே

அழகாய் தான் இருக்கிறாய்..

சோம்பல் முறிக்கையில்..

பூக்கள் பறிக்கையில்..

புன்னகை பூக்கையில் ..

அனால் பார்க்கத்தான் முடியவில்லை

என் கவிதைகள் படிக்கையில்

நீ கொள்ளும் வெட்கத்தை.....

கள்ளி!!!!! என் முன்னே படிக்க மாட்டேன்

என்று அடம் பிடிக்கிறாய்..

நான் என்ன செய்வேன்..??

உன் விழிகள் காக்கும்

இமைகள் போல்..

உன் இதயம் காக்கும்

என் நினைவுகள்..

என் கவிதைகளை பூக்களாக்கி

உன் கூந்தலில் சூட்டி பார்க்க ஆசை

அதிசயம் பாரேன்!!!

என் கவிதைகள் கும்மாளம் போடுகின்றன

உன் கூந்தலில் அமர போகும்

தருணம் எண்ணி

நடை பழகும்

தமிழ்க் குழந்தை

விழும் முன்னர் தாங்கி பிடிக்க

உடன் செல்லும் அன்னை போல்

நொடி நேரம் பிரியாது

உன் நிழல் போல் தொடர்வேன்

எனக்கென பிறந்தவளே...

நீ என்னுடன் இல்லாத நேரங்களில்

என் நிழலை தொலைத்து விடுகிறேன்..

உன்னுடன் இருக்கும் நேரங்களில்

என்னையே தொலைத்து விடுகிறேன்

நீயோ கண்டும் காணாமல் போகிறாய்

அனால் என்னால் மட்டும் ஏனோ

அது முடியவில்லை..

என் இதயத்தை திருடியது

நீ என்றாலும் சிறையில்

இருப்பது நான்தான்...

தூக்கம் தொலைந்து

வெகு நாட்கள் ஆயிற்று

கனவு மட்டுமே வாழ்க்கை ஆனது

கனவுகளின் நாயகியாய் நீ மட்டுமே..

ஒவ்வாரு நாளும்

என் கனவில் வந்து போகும்

உன் புன்னகைக்கு

ஒரு கவிதை எழுதிவிட்டு

அடுத்த புன்னகைக்கு காத்திருக்கிறேன்

உன் புன்னகைக்கு ஏங்கும்

சஹாரா பாலைவனம்

ஒரு முறை சிரித்து விடு

பூத்து குலுங்கட்டும்

..

இரவு தூக்கத்தில்

உன் நினைவுகளின் ஆதிக்கத்தில்

என்

நித்திரை நேரம்

நசுங்கி போகிறது..

..


உன்னை விரும்புகிறேன் மௌனம் என்னும் மொழியில்

உனக்கு புரிந்து விடும் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்குள்..

உள்ளுக்குள் உன்னை தான் உயிரை போல் சுவாசிக்கிறேன்..

நீ தெரிந்து கொள்வாயோ அதை அறிந்து கொள்வாயோ..

என்று யோசித்தே என் காலங்கள் போகுதடி..

புரிய வைக்கும் முயற்சிகள் தோற்று தான் போகின்றன..

எனது வார்த்தைகள் மட்டுமே என் அன்பை புரிய வைக்குமானால்

காகிதம் என்பது இல்லாமலே போகும்..

உன்னை பற்றி எழுதியே தீர்ந்தும் போகும்..

..

கண் மூடினால் கனவு வரவில்லை..

உன்னை பற்றிய நினைவுகள் மட்டுமே..

என்னை நானே தொலைத்து விட்டேன்

உன்னை சந்தித்த முதல் நொடி..

என் அருகில் இல்லா விட்டாலும்

என் இதயத்தின் உள்ளே தான் இருகின்றாய்..

என் விழிகளை உனது இமைகள் மூட. காண்கிறேன்..

என் நெஞ்சத்தில் உனது நினைவுகள் நிரம்ப காண்கிறேன்.

இருந்தும் தோற்று போகிறேன் என் காதல் சொல்ல...

நேசித்த இதயத்தில் நான் சுவாசித்த இதயம் நீ..

சந்தித்த உள்ளங்களில் என்னை சிந்திக்க வைத்தவள் நீ..

என் இரவுகளை திருடியவள் நீ..

கனவுகளை தொலைத்து விட்டு

உன் நினைவுகளை நேசிக்கிறேன்...



இருள் விலகாத காலை பொழுது

இன்னும் மலராத இளம் மொட்டு

கருப்பு வானத்தின் வெண்ணிலா.

ரோஜா பூவின் பனித்துளி.

இவை அனைத்தும் தோற்று விடும்

உன் அழகுக்கு முன்னால்..

... .. ..



எல்லோரையும் ஏமாற்றிவிட்டு

வந்துவிடுகிறேன் உன்னைப் பார்க்க

அனால் என்னையும் ஏமாற்றி விடுகின்றன

நீ வராத நாட்கள்...

வெண்ணிலவை பிடிக்கும் என்று சொன்னதால்..

உன்னை பிடிக்காமல் போகவில்லை....

அந்த வானிற்கு ஒரு காதலி வெண்ணிலா....

என் மனதிற்கான ராணி பெண் நிலா நீ

அள்ள நினைத்தால் நட்சத்திரம் ஆகின்றாய்

தொட நினைத்தால் தொடுவானம் ஆகின்றாய்

அன்பே நீ என்னவள் ஆவது எப்போது???

உன்னை சேரலாம் என்று

பார்வையாக மாறுகிறேன்

அனால் நீயோ காற்றாக மாறி

கலங்க வைக்கிறாய்... ...

என் விழிகள் தேடும் வசந்தம்

நீயாக இருக்கும்போது

என் வாழ்க்கை இருண்ட பாலைவனம் தான்

நீ தான் உன் மனதை மௌனம

எனும் சாவி கொண்டு பூட்டி விட்டாயே!!!!!

மழைத் துளியால்

துளிர்க்கும் சிறு மலர் போல

என் இதயத்தை துளிர்க்க வைத்தது

உன் பார்வை மட்டுமே

பிரிவின் தணலில் இப்போது

வாடுவதும் நீ வாழும் இதயம் மட்டுமே..

கடலில் கலக்கும்

என் கண்ணீர் துளியின் ஈரம்

யார் அறிவார்???

விழியில் விழுந்தவளே உன்னை துளியும் மறந்தால் என் துடிப்பும் நின்று விடும் உன்னுடன் கழியும் சில மணித்துளிகள் வானில் பறக்கிறேன் சிறகில்லாமல் என் இரு விழிகளிலும் கனவுகளை விதைக்கிறாய் உன் விழிகளுடன் யுத்தம் செய்தே எனது இரவுகள் கழிகின்றன என் இதயத்தை தீண்டும் உனது பார்வை ஒன்றை திருடி கொள்கிறேன் மனதோடு ஒற்றி கொள்கிறேன்

blog comments powered by Disqus