Site hosted by Angelfire.com: Build your free website today!
undefined
undefined


எனது கிறுக்கல்கள் வெறும் வார்த்தைகள் தான்.. விரைவாக வந்து வாசித்து விடு.. கவிதைகள் ஆகட்டும்
Home | ப்ரியமுடன் காதலி | நட்புக்காக | இதர கவிதைத் துளிகள் | Downloads



பவித்ரமான உன் நட்பு

என் வானில் நட்சத்திரமாய்..

துரத்தில் இருந்தாலும் நாள்தோறும்

பூத்து கொண்டு தான் இருகின்றது..

என் நெஞ்சில் என்றும் வாடாது

ஜீவன் உள்ள நம் நட்பு....

...

உன்னை பற்றிய நினைவுகளை

செலவலிக்கிறேன்

காகிதங்களில் கவிதையாக..

சுவாசத்தில் நிறைந்த உன்னை

இதயத்தில் நிலைநிறுத்தி விட்டேன்

அன்பு தோழியாக..

...

கண்ணீர் மட்டும் வேண்டாம்

அன்பு தோழி,

பிரிவு உனக்கும் எனக்கும் மட்டுமே

நம் இதயங்களுக்கு அல்ல..

நினைவுகள் இருப்பின்

நம் இதயங்கள் துடிக்கும்

தொட்டு கொள்ள முடியாத

தூரங்களில் கூட..

கண்களால் காண முடியாவிட்டாலும்

இதயத்தில் நேசித்து கொண்டு தான் இருக்கிறேன்

உன்னை மட்டும் அல்ல

உன் இதயம் கொண்ட நட்பையும்

தொலைவில் இருப்பதாக உன்னை நினைக்கவில்லை

எனக்குள் பூத்த இனிய வசந்தமே எப்போதும்

நீ என் இதயத்திற்கு வெகு அருகில் தான்

மௌனமாக என்னை நானே கேட்டு கொள்கிறேன்

உன்னுடன் மட்டும் வார்த்தைகள் வற்றி

நான் ஊமை ஆவதன் கரணம் என்ன??

கவிதைகள் வாசிக்க இதழ் திறக்கும்

நீ என்னிடம் பேசுவதற்கு தயக்கம் காட்டும்

மர்மம் என்னவென்று

என்னால் அறிய முடியவில்லை..

...

உன் உள்ளத்தின் உள்ளே நான் கண்டது

நேசமான நட்பும்

பாசமான இதயமும்

இருந்தாலும் ஒரு குறை

வார்த்தைகள் இல்லாத கவிதைகள்போல

உனது மௌனம்..

சுவாசிக்க கூட மறந்து விடுவேன்

உன்னை நேசிக்க மறக்க மாட்டேன்

என் வாழ்வின் அணையாத தீபமாய்

அன்பு தோழி உன் நட்பு..

எங்கு சென்றாலும் என்ன நேர்ந்தாலும்

ஒரு முறை திரும்பி பார்

என் கவிதைகள்

நிழல் போல் உன்னை தொடரும்

நான் இல்லா நேரங்களில்

உனக்கு தோள் கொடுக்கும்

சோகங்களில் தடுமாறி தவிக்கும் போது

எனது கவிதைகளை உனது இதயத்தில் எழுதுகிறேன்

உனது கண்ணீரின் ஈரம குறைந்து புன்னகை மலரட்டும்

இதயத்தின் பாரம் குறைந்து உன் நிலை மாறட்டும்

விண்ணை முட்டும் துன்பங்கள் வந்தாலும்

உன் உள்ளம எட்டும் துரத்தில் தான் என் நட்பு

கலங்காதே தோழி!!!!!!!!!!!!!







அன்புக்கு இனிய

உறவுகள் ஆயிரம்

வந்தாலும் என்னுயிர் தோழி

உனக்கு ஈடு இணை எவரும் இல்லை

உன் நட்புக்கு விலை இந்த உலகில் இல்லை!!!

என் கோபம் உன் முன்

செல்லாமல் போய் விடுகின்றது

நீ என்னை விட்டு

செல்வதாய் உணர்வதால்

உலகம் என்னை விட்டு

செல்வது போல் உணர்கிறேன் ..

நட்பின் வலி அதை நீயும்

உணர்ந்தால்

என் இதயம் அழும் ஓசை

நீ கேட்பாய்

blog comments powered by Disqus