Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
யார் தமிழர்
தமிழ்த் தொண்டு
பூரிய தமிழர்
அடையாளம்
பீற்றுவது போதும்
தத்தளிக்கும் தமிழ்
கணினி
தமிழையன்றோ...
தமிழா விழித்தெழுக
தமிழ்ப் புத்தாண்டு
தமிழனுக்கு ஒரு...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மணிமொழியாம் செந்தமிழைக் கணினியிலே புகுத்தி
அணிசேர்த்த தமிழாநின் பணிவளர வாழ்த்துக்கள்!

வானகத்துக் கோள்களையும் மண்ணகத்து இயல்களையும்
கானகத்து இயல்களையும் கண்டறிய வழிசெய்வீர்!

தொழில்நுட்ப முறைகளையும் சுடர்தமிழில் கற்பதற்கு
வழிசெய்து சமுதாயம் வளங்காணச் செய்வீரே!

அறிவியலின் நுட்பங்கள் அத்தனையும் நற்றமிழில்
முறையுடனே கற்றறிய முயற்சிபல செய்வீரே!

பள்ளியெங்கும் கணினிகளைப் பாவிக்க வழிசெய்து
பிள்ளைகளின் உயர்வுக்குப் பேருதவி செய்வீரே!

செந்தமிழின் உயர்வினையும் சீரினையும் இவ்வையம்
வந்தனைகள் செய்திடவே வழிவகைகள் காண்பீரே!

புதுவுலகின் பாதையிலே பூந்தமிழும் நடைபயில
இதுதருணம் இதைவிட்டால் இனிவேறு தருணமுண்டோ?

கலைகளெல்லாம் கணினிவழி கற்பதற்கோர் வழிசெய்து
நிலவுலகில் நம்கலைகள் நிலைத்திருக்க வழிகாண்க!

இவ்வுலகின் புதுமைகள் யாவினையும் கணினியிலே
செவ்வியநம் செந்தமிழில் சேர்ப்பதற்கு உழைத்திடுக!

எங்கெங்கிலும் கணினிமயம் எல்லாமே கணினிமயம்!
பொங்குதமிழ் மொழியினிலும் பொலிந்திடுக கணினிமயம்!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...