Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
கனவின் சதி
காதலன் நான்...
என்றுதான் மீட்சி
ஆசைகொண்டேன்
காதலி
என்காதல் மெய்யடி
ஏன் மறந்தாய்
நான் கம்பனில்லை!
பெண் வேண்டும்
உயிரும் கரைகிறதே!
புதுமையில்...
பெண்ணின்பம்
ஊடல்
தமிழச்சி வேண்டும்!
அவள் நினைவு
வாசம் போமோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
காதலைப் பற்றிப் பாடாத கவிஞனும் மண்ணில் உண்டோ?
சங்கக் கால புலவர் தொட்டு வள்ளுவர், கம்பர், இளங்கோ,
பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
கண்ணதாசன் வரை இன்னும் எத்தனையோ கவிஞர்கள்
காதலைப் பற்றி இனிக்க இனிக்கப் பாடியிருக்கின்றார்களே!
இவர்களைவிடவா நாம் அற்புதமாகப் பாடிவிடப் போகிறோம்?
உண்மை! உண்மை! உண்மை!
என்றாலும்,
அடியேன் சற்று முயற்சி செய்திருக்கிறேன்.
நான் அனுபவித்ததையும் கற்பனையில் சஞ்சரித்ததையும்
சிறிது பாடியிருக்கிறேன்!
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.

காதல்!

அது ஒரு தனி உலகம் என்றுதான் சொல்ல வேண்டும்!
ஏனெனில்,
எல்லாரும் காதல் வசப்படுவதில்லை!
அது சிற்சிலருக்கே வாய்க்கும் ஒரு வாய்ப்பு!

பாரதி பாடுவான்:

காதல்! காதல்! காதல்!
காதல் போயிற் காதல் போயிற்
சாதல்! சாதல்! சாதல்!

காதல் வசப்பட்டவனுக்கு இந்த உலகத்தில்
காணும் பொருளெல்லாம் அழகாகவே தோன்றும்!
அதுவும், அவனொரு கவிஞனென்றால்
சொல்லவும் வேண்டுமோ?
நன்றி!

அன்புடன்,
மு. ஆசைத்தம்பி


உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...