Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
யார் தமிழர்
தமிழ்த் தொண்டு
பூரிய தமிழர்
அடையாளம்
பீற்றுவது போதும்
தத்தளிக்கும் தமிழ்
கணினி
தமிழையன்றோ...
தமிழா விழித்தெழுக
தமிழ்ப் புத்தாண்டு
தமிழனுக்கு ஒரு...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
உலகில் வாழும் ஒவ்வோர் இனத்திற்கும் ஒருமொழி உண்டு.
அதுதான் தாய்மொழி! சில இனத்திற்கு எழுத்தோ
எழுத்திலக்கணமோ இருக்காது பேச்சுமொழி மட்டுமே இருக்கும்.
எனினும், அவர்கள் பிற இனத்தின் எழுத்துக்களைக் கொண்டு
இலக்கணம் வகுத்து தம் வாய்மொழி இலக்கியத்திற்கு வடிவம்
அமைத்து இலக்கணமும் வகுத்துக்கொள்கின்றார்கள்.
என்றபோதும், அவர்கள் பிற இனத்தின் எழுத்துக்களை
நம்பித்தான் வாழவேண்டியிருக்கிறது. அந்த இனத்திற்குத்
தனிச்சிறப்புண்டோ? நமது நிலை வேறன்றோ?
நமக்கு என்ன இல்லை? எழுத்து இருக்கிறது! இலக்கணம் இருக்கிறது!
இலக்கியம் இருக்கிறது! அதுவும் நிரம்பக் கிடக்கிறதே!
நம் முன்னோர்கள் நமக்கென விட்டுச் சென்ற எழுத்து! இலக்கணம்!
இலக்கியங்கள்! அவை எல்லாம் நமக்கு ஈடற்ற கருவூலம் அன்றோ?
தம் தாய்மொழியைக் கற்காத எவரும் தம் இனத்தின் அருமை
பெருமைகளை அறியக் கூடுமோ?
எனவே, தமிழர்களே, தமிழைக் கற்றுக்கொள்ளுங்கள்!
பின்பு இலக்கண இலக்கியங்களைப் படியங்கள்!
எளிய முறையில் இலக்கண இலக்கியங்களை விளக்கும்
தமிழ்ப் புத்தகங்கள் நிரம்பக் கிடக்கின்றன அவற்றை வாங்கிப்
படியுங்கள் தமிழின் அருமை பெருமை தெரியும்!
தமிழ்ப்பற்றும் தானாக வந்துவிடும்!
ஓர் இனத்திற்கு அடையாளமே அவர்தம் மொழியே அன்றோ?
மொழி இல்லாத இனம் அடையாளம் இல்லாத இனமென்று
சொல்லவும் வேண்டுமோ?

மாந்தன் பிற மாந்தனோடு கருத்துப் பரிமாறிக் கொள்வதற்கு
முதலில் ஒலிகளையும் சைகைகளையும் பயன்படுத்தினான்.
பின்பு சில காலத்திற்குப் பின்பு ஓவிய எழுத்துக் குறிப்புகளைப்
பயன்படுத்தினான். அதன் பின்பு சில காலத்திற்குப் பின்
வரிவடித்தைக் (எழுத்து) கண்டுபிடித்தான்.
மேலும் சில காலத்திற்குப் பின்பு சொற்களை உருவாக்கி
மொழியை வளப்படுத்தினான். பின்பு இலக்கியம் படைத்து
அதன் பின் இலக்கணம் வகுத்து மொழியைச் செம்மைப் படுத்தினான்.
இதற்கு எத்தனை நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டும்?
இப்படிப் பல நூற்றாண்டு காலமாக தொடர்ந்து நிலைபெற்று வந்த
ஒரு மொழியை தம் தாய்மொழியைக் கற்காத பேணாத ஒர் இனம்
உலகில் அடையாளம் பெற்ற இனமாக வாழ்ந்த வரலாறு உண்டோ?
எனவே, மொழி மறந்த இனம் முகவரி அற்று மூழ்கிப் போகும்!
நன்றி!

அன்புடன்,
மு. ஆசைத்தம்பி


உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...