Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
தமிழ்ப்பெயர்
தமிழ்நாட்டுத் தமிழன்
தமிழ்ச்செய்தி
இன்றைய தமிழ்ப்...
என்ன கொடுமை
பல்நோக்கு மண்டபம்
எங்கே மனிதநேயம்
ஊனமுற்ற தமிழ்
இன உறவும் மன...
சுதந்திரம்
ஏன் இந்த முடிவு
மனம் பதறுகிறோம்
நிழல் மரம்
இன்பம் பயக்குமா?
தமிழ் நாடகம்
சைபீர் முகமது
வேண்டாத சாதி
இன்றைய மாணவர்
புகைமூட்டம்
வாழ்த்துப் பரிமாரி...
தமிழ் நெடுங்கணக்கு
யாரிடம்போய்...
பிள்ளையையும்...
இந்நாட்டுத் தமிழன்...
செம்மொழி மாநாடு
பவன்- கறிஹவுஸ்
 
 
 
 
 
மகாகவி பாரதியார் தமிழுக்கு அறிமுகப்படுத்திய ஒரு
புதிய பாணி என்றாலும், மேல் நாட்டவர்களே இப்புதிய
முறையை உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள்.
சில வேளைகளில் யாப்புக்குள் நம் சிந்தனைகளை அல்லது
கருத்துகளை நினைத்தது நினைத்தபடி தெளிந்த நீரோட்டம் போல்
வெளியிட முடிவதில்லை. அப்படியே வெளியிட்டாலும்
யாப்புக்குக் கட்டுப்பட்டு, ஓசைக்கு உட்பட்டு
கவிதையில் இருக்க வேண்டிய முழுக்கருத்தினையும்
உணர்ச்சியையும் கற்பனையையும் முழுவதையும்
வெளிபடுத்த முடியாமல் வெறும் யாப்புக்கு உட்பட்ட
ஓசைக் கவிதைகளையே எழுதிவருகின்றோம்!
என்ற போதும், மரபுக் கவிதைகளை எழுதும் போது
உணர்ச்சியும் கற்பனையும் கருத்துகளும்
இயல்பாக அமைவதும் உண்டு மறுப்பதற்கில்லை!
நம் முன்னோர்கள் யாப்புக்கு கட்டுபட்டு
ஓசைக்கு உட்பட்டு, கற்பனை! உணர்ச்சி! தத்துவம்!
பக்தி! சிந்தனை! மறைபொருள்!
இன்னபிற யாவும் கலந்து தரவில்லையா?
என நீங்கள் கேட்பது முற்றிலும் சரியே!
அன்றைய கவிஞர்களின் ஆற்றலைக் கொண்டு
இன்றைய கவிஞர்களின் ஆற்றலை ஒப்பிடுவது
கவிதையின் பரிணாம வளர்ச்சியை அறியாமல்
பேசுவதற்கு ஒப்பாகும்!
நம் கவிதைகள் கடந்துவந்த சில நூற்றாண்டை
ஆராய்ந்தோமானால், கவிதைகள் யாப்பென்னும்
கட்டுக்குள்ளிருந்து வெளிவந்து சில புதிய
பரிமாணங்களை அமைத்துக் கொண்டமையை அறியலாம்!
எடுத்துக் காட்டுக்கு: சித்தர் பாடல்கள், சிந்து பாடல்கள்,
கும்மி பாடல்கள், இசைப் பாடல்கள் எனப் பல உள்ளனவாம்!
அந்த வகையில், மகாகவி பாரதியின் மூலம்
அறிமுகமானதே இந்த வசனக் கவிதை.
வசனக் கவிதை என்று இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள்
உரைவீச்சு என்றே இதனை அழைக்கின்றார்கள்.
எது எப்படியோ சொல்லும் கருத்துகளை மட்டும் நாடுவோம்!
நன்றி!

அன்புடன்,
மு. ஆசைத்தம்பி


உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...