Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
கனவின் சதி
காதலன் நான்...
என்றுதான் மீட்சி
ஆசைகொண்டேன்
காதலி
என்காதல் மெய்யடி
ஏன் மறந்தாய்
நான் கம்பனில்லை!
பெண் வேண்டும்
உயிரும் கரைகிறதே!
புதுமையில்...
பெண்ணின்பம்
ஊடல்
தமிழச்சி வேண்டும்!
அவள் நினைவு
வாசம் போமோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
குயில்வந்து பாடுகின்ற குளிர்ச்சோலை அந்தக்
  குளிச்சோலை நடுவானில் குளிர்நிலவும் பொழியும்!
வியக்கின்ற வகையினிலே மேகங்கள் ஆங்கு
  மெள்ளதரை இறங்கிவந்து மேதினியில் ஆடும்!
வயிரத்தின் ஒளிவீசும் வான்மீன்கள் அந்த
  வனத்தினிலே குறைவின்றி வயிரமலர் தூவும்!
நயமிக்க அவ்விடத்தில் நானிருந்த வேளை
  நங்கைக்கோர் எழிலரசி நடந்துவந்தாள் ஆங்கே!

தண்ணொளியைச் சிந்துகின்ற தண்மதியே இந்தத்
  தையலெழில் உருபெற்றுத் தரைவந்த தென்கோ!
பண்ணிசைத்துக் கவிபாடும் பாவலர்கள் நெஞ்சில்
  பதுமையென நடனமிடும் பாவைவடி வழகோ!
எண்ணமதில் இதுபோல ஏதேதோ எண்ணி
  எழிலரசி அவளழகில் எனைமறந்து நின்றேன்!
கண்ணசைவில் எனையழைத்தாள்! கைபிடிக்க விரைந்தேன்!
  கணம் மறைந்தாள்! என்சொல்வேன் கனவிழைத்த சதியை!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...