Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
கனவின் சதி
காதலன் நான்...
என்றுதான் மீட்சி
ஆசைகொண்டேன்
காதலி
என்காதல் மெய்யடி
ஏன் மறந்தாய்
நான் கம்பனில்லை!
பெண் வேண்டும்
உயிரும் கரைகிறதே!
புதுமையில்...
பெண்ணின்பம்
ஊடல்
தமிழச்சி வேண்டும்!
அவள் நினைவு
வாசம் போமோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
தமிழச்சி ஒருத்தி எனக்கு வேண்டும் - செந்
தமிழச்சி ஒருத்தி எனக்கு வேண்டும்

பூங்கொடி போன்ற மென்னிடையும்
  பூவைப் போன்ற ஒளிமுகமும்
தீங்கனி யொத்த செவ்விதழும்
  சிலையைப் போன்ற வடிவுகொண்ட

                தமிழச்சி ஒருத்தி...

கூறு கெட்டுக் கூந்தலினைக்
  குறுக வெட்டிக் கொள்ளாமல்
ஆறு அடிக்கும் குறையாத
  அழகு கூந்தல் கொண்டிருக்கும்

                தமிழச்சி ஒருத்தி...

போலிப் புதுமை உடைபூண்டு
  பொல்லாக் கவர்ச்சி காட்டாமல்
சேலை உடுத்திப் பூச்சூடிச்
  சிரித்த முகத்தோ(டு) ஆடிவரும்

                தமிழச்சி ஒருத்தி...

அந்நியர் மொழியுங்கற்று
அன்னைக்(கு) ஈடு தாய்மொழியாம்
கன்னித் தமிழும் கற்றறிந்து
  கண்ணாய்த் தமிழைப் போற்றுகின்ற

                தமிழச்சி ஒருத்தி...

மூடத் தனத்துப் போக்கினிலே
  மூழ்கிக் கிடந்து தோயாமல்
கேடு செய்யும் பழமைகளைக்
  கிள்ளி எறியும் துணிவுகொண்ட

                தமிழச்சி ஒருத்தி...

உரிமை! உரிமை! என்றுசொல்லி
  ஒழுங்கு கெட்டு வாழாமல்
அரிய பெண்ணின் பண்பனைத்தும்
  அடங்கப் பெற்று விளங்குகின்ற

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...