Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
கனவின் சதி
காதலன் நான்...
என்றுதான் மீட்சி
ஆசைகொண்டேன்
காதலி
என்காதல் மெய்யடி
ஏன் மறந்தாய்
நான் கம்பனில்லை!
பெண் வேண்டும்
உயிரும் கரைகிறதே!
புதுமையில்...
பெண்ணின்பம்
ஊடல்
தமிழச்சி வேண்டும்!
அவள் நினைவு
வாசம் போமோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
முதன்முதலில் முகம்பார்த்து
  மோனத்தில் நின்றதையும்
இதமிதமாய்க் கனவுகளில்
  எங்கெங்கோ பறந்ததையும்
நிதநிதமும் சந்திக்க
  நெஞ்சத்தில் துடித்ததையும்
இதயமது மறக்கவில்லை
  என்காதல் கண்மணியே!

விண்ணோடு தவழ்ந்தாடும்
  வெண்ணிலவின் ஒளியினிலே
கண்ணோடு கண்பேசிக்
  கைபிடித்து மொழிபேசிப்
பண்ணோடு கவிபாடிப்
  பழகியதோர் நினைவெல்லாம்
மண்ணோடு மண்ணாகி
  மறைந்திடுமோ பொன்மானே?

என்னாசை எல்லாமே
  ஏந்திழையே நீயென்று
பொன்னாசை மண்ணாசை
  புகழாசை மறந்திருந்தேன்!
உன்னாசை என்னாசை
  ஒன்றென்று நினைத்திருந்தேன்!
இன்னோசை குயில்மொழியே
  ஏன்என்னை மறந்தாயோ?

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...