Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
தமிழ்ப்பெயர்
தமிழ்நாட்டுத் தமிழன்
தமிழ்ச்செய்தி
இன்றைய தமிழ்ப்...
என்ன கொடுமை
பல்நோக்கு மண்டபம்
எங்கே மனிதநேயம்
ஊனமுற்ற தமிழ்
இன உறவும் மன...
சுதந்திரம்
ஏன் இந்த முடிவு
மனம் பதறுகிறோம்
நிழல் மரம்
இன்பம் பயக்குமா?
தமிழ் நாடகம்
சைபீர் முகமது
வேண்டாத சாதி
இன்றைய மாணவர்
புகைமூட்டம்
வாழ்த்துப் பரிமாரி...
தமிழ் நெடுங்கணக்கு
யாரிடம்போய்...
பிள்ளையையும்...
இந்நாட்டுத் தமிழன்...
செம்மொழி மாநாடு
பவன்- கறிஹவுஸ்
 
 
 
 
 
பவன்,
இப்போதெல்லாம் நம்மவர்கள் நடத்தும்
தம் உணவகங்களுக்கு,
ரிஷிபவன், ஆநந்தபவன், கிருஷ்ணபவன்,
அந்தப் பவன், இந்தப் பவன் என்று
வடமொழியிலேயே பெயர் சூட்டுகின்றார்கள்!
வமொழிக்கும் தமிழுக்கும் வேறுபாடு தெரியாமல்
இப்படிச் செய்கின்றார்களா?
அல்லது தெரிந்தேதான் செய்கின்றார்களா?
தெரியவில்லை! தமிழனின் போக்குப் புரியவில்லை!

இது ஏனென்று சில உணவக உரிமையாளர்களிடம் வினவினேன்.
அவர்கள் சொன்ன பதில்,
பவன் என்பது தேவர்கள் உணவருந்தும்
ஒரு புனிதமிக்க இடமாம்!
அதன் பொருட்டே பெயருக்குப் பின்னால்,
பவன் என்ற சொல்லைச் சேர்ப்பதாகச் சொன்னார்கள்
இவர்கள் நடத்தும் பவன்களுக்குக்
கண்டிப்பாகத் தேவர்கள் உணவருந்த வருவதில்லை!
பலவிதமான குணங்கொண்ட மனிதர்களே
உணவருந்த வருகின்றார்கள்.
இவர்களில்,
நல்லவர்களோடு நரிகுணத்தவர்களும் வருவார்கள் அன்றோ?
ஆக,
இவர்கள் நம்பும் பவன் என்னும் புனிதமிக்க பெயர்
மாசுபடுகின்றதே!
நம்பிக்கை தூசுபடுகின்றதே!

இவர்களுக்கெல்லாம் இனமானம் என்பது
என்னவென்று தெரியாது!
எடுத்துச் சொன்னாலும் புரியாது!

ஏற்கனவே,
இவர்களின் பெயர்கள் வடமொழியில் இருக்கின்றன!
அது அவர்களின் குற்றமல்ல!
பெயர் வைத்த பெற்றோர்களுக்கு,
வடமொழிக்கும் தமிழுக்கும்
வேறுபாடு தெரியாததால் ஏற்பட்டதன் விளைவு அது!

"ஆச்சி அறுசுவை உணவகம்"
"சுவை சுவை சுப்பம்மா உணவகம்"
"அறுசுவை உணவகம்"
இப்படியெல்லாம் பெயர் வைக்க
தமிழனுக்குப் விருப்பம் இல்லை போலும்!

தாய்மொழி பற்றில்லாதவர்களாலும்,
தமிழ் அறியாதவர்களாலும்,
தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு
தெரியாதவர்களாலும்
ஏற்படும் கோளாறுகளே இவை!

இந்தக் கோளாறுகளை,
தமிழ் அறிந்த ஒருவரை நாடி சரிசெய்ய
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழனுக்கு
நேரமில்லையா?
அல்லது
அதுபற்றிக் கவலை இல்லையா?

செம்மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்ட
தமிழரின் அறியாமை என்னே!

எல்லா உணவகங்களும் அப்படியல்ல!
இப்படிச் சில நம்மவர்கள் நடத்தும் உணவகங்கள்!

நம்மவர்களுக்கு இருக்கும் இந்தத்
தாழ்வு மனப்பான்மை என்றுதான் மாறுமோ
தமிழனின் அறியாமை என்றுதான் தீருமோ?

இவர்கள் கூறும் மற்றொரு காரணம்
இவர்கள் நடத்தும் உணவகங்களுக்குப்
பல இனத்தைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்களாம்!
அதனால்,
பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில் இருந்தால்
மற்றைய இனத்தவர்களும் மதித்து வருவார்களாம்!
எப்படி நம்மவர்களின் சிந்தனை?
தமிழுக்குத் தமிழன் செய்த நிந்தனை!

ஆங்கிலம் கூடாதென்றா கூறினோம்?
ஆங்கிலம் ஆங்கிலமாக இருக்கட்டும்!
தமிழ் தமிழாக இருக்கட்டும்!
இதுவே இனமானத் தமிழர்களின் வேண்டுகோள்!
இதற்கும் வேண்டுமோ தூண்டுகோள்?

தமிழர்கள் சமைக்கும் உணவைச் சுவைக்க வரும்
வேற்று இனத்தவர்கள்
தமிழிலே பெயர்ப்பலகைகள் இருப்பதைக் கண்டால்
உணவருந்த வரமாட்டார்கள் என்றெண்ணுவது
மடைமையிலும் மடைமையாகும்!
தாய்மொழிக்கு முதன்மை தருவது
தமிழரின் முதல் கடமையாகும்!

பிற இனத்தவர்கள் தம் கடைகளின்
பெயர்ப்பலகைகளில் நம் தமிழுக்கு இடம் தரும்போது
நம்மவர்கள் தம் தாய்மொழிக்கு இடம் தராதது
கேவலத்திலும் கேவலம்!

தம் தாய்மொழியின்பால் நம்பிக்கை அற்ற இவர்களை
இனமானம் இல்லாத மூடர்கள் என்று சாற்றினால் தவறாகுமோ?

உலகமயமாய் வாழ்வதாக எண்ணி இவர்கள்
தன்னிலை மறந்து வாழ்கின்றார்கள்!
அடையாளமும் இழந்து போகின்றார்கள்!

மொழியை நிலைறுத்தாத எந்த இனமும்
அடையாளம் மாறாதென்றும்
நிலைநின்றதாக வரலாறு இல்லை!

நம்மவர்கள் இன்று வடமொழி பிரியர்களாகி வருகின்றார்கள்!
நற்றமிழை மறந்து வருகின்றார்கள்

சுழியம் என்ற சொல்லை நடைமுறைபடுத்தியும்
இன்னும் பூஜ்ஜியம், சைபர் என்னும் சொல்லைப் பிடித்துக்கொண்டு
விடாப்பிடி கண்டர்களாக இருக்கின்றார்கள்!
சுழியம் என்ற தமிழ்ச்சொல்லை ஏற்க மறுக்கின்றார்கள்!

வாஸ்த்து என்கின்றார்கள் அதிஷ்ட விஞ்ஞானம் என்கின்றார்கள்!
தமிழில் ஓதினால் பக்தி வரவில்லையாம்!
வடமொழியில் ஓதினால்தான் பக்தி பொங்கி வருகின்றதாம்!
அந்தோ! ஆரிய மாயையில் மூழ்கி
அடையாளம் அழிந்து போகின்றார்கள்!
அருந்தமிழ் உணர்வு இழந்து வருகின்றார்கள்!

ஆரிய மாயையில் வீழ்பவன்!
அடையாளம் அற்றுத் தாழ்பவன்!
தாய்மொழி தமிழைச் சூழ்பவன்!
தன்மானத் தமிழனாய் வாழ்பவன்!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...