Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
தமிழ்ப்பெயர்
தமிழ்நாட்டுத் தமிழன்
தமிழ்ச்செய்தி
இன்றைய தமிழ்ப்...
என்ன கொடுமை
பல்நோக்கு மண்டபம்
எங்கே மனிதநேயம்
ஊனமுற்ற தமிழ்
இன உறவும் மன...
சுதந்திரம்
ஏன் இந்த முடிவு
மனம் பதறுகிறோம்
நிழல் மரம்
இன்பம் பயக்குமா?
தமிழ் நாடகம்
சைபீர் முகமது
வேண்டாத சாதி
இன்றைய மாணவர்
புகைமூட்டம்
வாழ்த்துப் பரிமாரி...
தமிழ் நெடுங்கணக்கு
யாரிடம்போய்...
பிள்ளையையும்...
இந்நாட்டுத் தமிழன்...
செம்மொழி மாநாடு
பவன்- கறிஹவுஸ்
 
 
 
 
 
தற்போது தகவலமைச்சு
தன்மூப்பாய்ச் செய்திருக்கும்
தமிழ்ச்செய்தி நேரமாற்றம்
அது
தமிழ்பேசும் ஒட்டுமொத்த
தமிழருக்கே கிடைத்த
தாங்கொண்ணா ஏமாற்றம்!

சிலகாலம் கண்குளிர!
செவியினிக்க மனந்திளைக்க!
சில்லென்ற இராப்பொழுதில்!
செந்தமிழில் தமிழ்ச்செய்தியைச்
சிந்தைமகிழக் கண்டுவந்தோம்!
மற்ற நிகழ்ச்சிகட்கு
வழிவிடும் நோக்த்தில்
தமிழ்செய்தியைப் பந்தாடும்!
தகவலமைச்சின் தன்மூப்பைச்
சகித்துக்கொண்டுவந்தோம்!

தமிழர்கள் தவறாமல் கண்டுவரும்
தமிழ்ச்செய்தி ஒளியேறும் நேரத்தை,
வேலை முடிந்து வீடு திரும்பும்
மாலை வேளையில் மாற்றியிருப்பது!
மனத்தில் எரிச்சலை ஏற்றியிப்பது!
தமிழர்தம் உரிமையை!
மகிழ்ச்சியை தன்மானத்தை!
கொய்த செயலாகும்!
நெஞ்சில் அம்பை
எய்த செயலாகும்!

நேரமாற்றத்தைப் பெரும்பான்மை - தமிழ்
நேயர்கள் ஆதரிப்பதாக
ஆய்வு குறிப்புடன் தகவலமைச்சு
ஆதாரங்கள் காட்டுகிறது!
அது
மேலும் தமிழருக்கு
வேதனை ஊட்டுகிறது!

தமிழ்ச்செய்தி நேரமாற்றத்தைத்
தமிழர்களில் பெரும்பான்மையினர்
ஆதரிப்பதாகக் கூறுவது
ஐயத்திற்குரிய ஆய்வாகும்!
அன்றுதொட்டு இன்றுவரை
அரசாங்கத்தை ஆதரித்துவரும்!
ஒட்டுமொத்த தமிழர்களின்
உணர்வுகளை மதிக்காதது!
தகவலமைச்சுக்குத் தேய்வாகும்!

இதுவரையில் எம்மவர்கள்
இனியதொரு இராப்பொழுதில்
இதயங்குளிர கண்டுகளிக்க
ஒரு நிகழ்ச்சியில்லை!
வேலைக்குச் சென்றவர்கள்
வீட்டுக்குத் திரும்பாத
வேளைகெட்ட நேரங்களில்
நிகழ்ச்சிகளை ஒளியேற்றுவது
நெஞ்சுக்கு மகிழ்ச்சியில்லை!

நாட்டு நடப்பினையும்!
நம்மவரின் நிலைமையினையும்!
அரசியல் சட்டங்களையும்!
அமலாகும் திட்டங்களையும்!
உலக நடப்புகளையும்!
உண்மை நிலவரங்களையும்!
நம்மொழி! செந்தமிழில்!
நாமறிந்து தெளிவுபெற!
மறுபடியும் தமிழ்ச்செய்தியை
மனம்விரும்பும் இராப்பொழுதில்!
ஒளிபரப்பவேண்டும்!
அது வருந்தியிருக்கும்!
தமிழர் நெஞ்சில்
களிபரப்ப வேண்டும்!

தமிழர்களைத் தலைமைத்தாங்கும்
தானைத் தலைவர்களும்!
நாட்டின்பிற இயக்கங்களும்!
நலங்காக்கும் மன்றங்களும்!
விரைவில் தமிழ்ச்செய்திக்கொரு
விடிவு காணவேண்டும்! - நல்ல
முடிவு காணவேண்டும்!
தார்மீக அடிப்படையில்
தமிழர்களின் உணர்வுகளை!
உரிமைகளை மதியாது!
உதாசீனம் செய்யும் செயலை!
இனியும் பொறுக்க முடியாது!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...