Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
தமிழ்ப்பெயர்
தமிழ்நாட்டுத் தமிழன்
தமிழ்ச்செய்தி
இன்றைய தமிழ்ப்...
என்ன கொடுமை
பல்நோக்கு மண்டபம்
எங்கே மனிதநேயம்
ஊனமுற்ற தமிழ்
இன உறவும் மன...
சுதந்திரம்
ஏன் இந்த முடிவு
மனம் பதறுகிறோம்
நிழல் மரம்
இன்பம் பயக்குமா?
தமிழ் நாடகம்
சைபீர் முகமது
வேண்டாத சாதி
இன்றைய மாணவர்
புகைமூட்டம்
வாழ்த்துப் பரிமாரி...
தமிழ் நெடுங்கணக்கு
யாரிடம்போய்...
பிள்ளையையும்...
இந்நாட்டுத் தமிழன்...
செம்மொழி மாநாடு
பவன்- கறிஹவுஸ்
 
 
 
 
 
கரந்த பாலில் நஞ்சைக் கலப்பதுபோல்
கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில்
இணைக்கத் திட்டமா?
ஈதென்ன தமிழுக்குச்
சோதனக் கட்டமா?

தேய்ந்துவரும் தமிழைச் சீர்செய்யத்
திட்டங்கள் தீட்டுவார் யாருமில்லை! தமிழ்
அடையாளம் அற்றுப்போகவே
அரும்பணிகள் ஆற்றுகின்றார் தம்
அன்னையையே தூற்றுகின்றார்!

வேண்டாதவன் செய்யவில்லை - இந்த
வேலையற்ற வேலையை - அந்தோ!
வேண்டியவன் தமிழனே - இதைச்
செய்யத் துணிந்தானே! தமிழ்
சீர்கெடப் பணிந்தானே!

தமிழில் இல்லாத (சொற்களை) ஒலிகளைத்
தமிழ் கடன்பெறுவதொன்றும் புதிதல்ல - அவை
திசைச்சொல் (வடசொல்) சொல்லெனவே கொள்ளப்படும்
செந்தமிழ் நெடுங்கணக்கில்
சேர்க்க எண்ணுவது தள்ளப்படும்!

தமிழ் அல்லாத வடமொழி சொற்களைத்
தமிழ் வரிவடிவம் தந்துவிட்டால் - அது
தமிழென்று ஆகுமோ? இந்தத்
தன்மானம் கெட்ட தமிழனின்
தாழ்ந்த புத்தி என்று போகுமோ?

ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வரிவடிவங்களைத் தமிழர்கள்
தமிழ் வரிவடிவங்களைக் கொண்டு அமைத்தவை
தமிழில் பிறசொற்கள் நுழைந்ததால்
தமிழுக்கு இவ்வொலிகள்
தேவைபட்டன - எனினும்
தமிழ் நெடுங்கணக்கில் இவை
தள்ளப்பட்டன!

வழக்கிழந்த ஒரு மொழிக்கு வாழ்ளிக்க
வரிந்துகட்டி நிற்கின்றான் நம்தமிழன் - தம்
தம் தாய்மொழி தேய்ந்து வருவது
பற்றிச் சற்றேனும் வருந்தவில்லை!
இன்னும் தமிழன் திருந்தவில்லை!

தமிழுக்கே இலக்கணம் வகுத்த
சான்றோர்கள் அறியாததையா - இந்தத்
தான்தோன்றித் தம்பிரான்கள் அறிந்துவிட்டார்கள்!
தமிழென்ன இவர்களின் சொத்தா? இவர்கள்
தலைக்கேறியது என்ன பித்தா?

இருக்கின்ற எழுத்துக்களே போதுமய்யா! - புது
இலக்கணம் வகுக்க நினைப்பது - தமிழ்
அடித்தளத்தை அசைப்பதற்கு ஒப்பாகும்
அதுவும்,
அன்னை மொழிக்குரியவர்கள் - இதை
அறிந்து செய்வது மிகவும் தப்பாகும்!

வண்ணத் தமிழ்ப்பெயர்கள் சூடிடவும்;
மழலைகளைத் தமிழ்ப்பள்ளி அனுப்பிடவும்
சமயவழி தமிழைப் புழங்கிடவும்
தமிழ்த்துறை அறிஞர்கள் முயலவில்லை!
இவர்கள்
தன்மானத் தமிழர்கள் தானா என
ஏற்க இயலவில்லை!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...