Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
தமிழ்ப்பெயர்
தமிழ்நாட்டுத் தமிழன்
தமிழ்ச்செய்தி
இன்றைய தமிழ்ப்...
என்ன கொடுமை
பல்நோக்கு மண்டபம்
எங்கே மனிதநேயம்
ஊனமுற்ற தமிழ்
இன உறவும் மன...
சுதந்திரம்
ஏன் இந்த முடிவு
மனம் பதறுகிறோம்
நிழல் மரம்
இன்பம் பயக்குமா?
தமிழ் நாடகம்
சைபீர் முகமது
வேண்டாத சாதி
இன்றைய மாணவர்
புகைமூட்டம்
வாழ்த்துப் பரிமாரி...
தமிழ் நெடுங்கணக்கு
யாரிடம்போய்...
பிள்ளையையும்...
இந்நாட்டுத் தமிழன்...
செம்மொழி மாநாடு
பவன்- கறிஹவுஸ்
 
 
 
 
 
கோயில் - மண்டபம்

கோடி கோடியாய்க் கொட்டிக்
கோயில் குளங்களைக் கட்டிக்
குடமுழுக்குச் செய்து
கூட்டம் கூடி விழா நடத்திக்
குதூகலங் காண்பதிலேயே
குறியாய் இருக்கின்றது இந்தத் தமிழினம்!

திருமணம் நடத்தவும்
விருந்து நடத்தவும் விழா கொண்டாடவும்
சீனர்க்குரிய மண்டபத்தையே
தேடி ஓடுகின்றது! நாடி நிற்கின்றது!
நம்பிக்கையில் ஊறி
நல்லறிவு பெற்ற தமிழினம்!

என்னே வளர்ச்சி!

தமிழனிருக்கும் ஊரெங்கும்
தனியொரு மண்டபம் அமைத்திடும் சிந்தனை
நமது சமுதாய தலைவர்களுக்கோ
செல்வமிருக்கும் செல்வந்தர்களுக்கோ
சிந்தனையில் ஏன் தோன்றவில்லை?

சுடுகாடு - மின்சுடலை

தமிழர்க்குரிய சுடுகாடு இருக்கிறது - அது
தரம் தாழந்து காடுகள் அடர்ந்து கிடக்கிறது!
சவங்களை இன்னும் விறகு கட்டைகளைக் கொண்டு எரிக்கின்றது!
இந்த உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றது!
இதுபற்றி யாருக்கு உரைக்கின்றது?

சீனர் நடத்தும் மின்சுடலைக்கே
தேடி ஓடுகின்றது!
சவம் எரிக்கும் மின்சுடலைகள்
தமிழர்க்கென்று எத்தனை இருகின்றன?

இந்த நூற்றாண்டை விட்டு
எம்தமிழர் சுடுகாடுகள் பின்னோக்கி நிற்கின்றது!

தமிழனுக்கு இது தலைகுனிவு அன்றோ!

சுடுகாடு தோறும் தமிழனுக்கென்று
சுயமாக ஒரு மின்சுடலை அமைக்க இந்தத்
தமிழனுக்கு ஏன் தோன்றவில்லை?
சமுதாயத் தலைவர்களும்
சாதனைத் தலைவர்களும்
சாதித்த சாதனைகள் என்ன?

தமிழ்ப்பள்ளி - தாய்மொழி

கோயிலுக்கென்றால் அள்ளியள்ளிக்
கொடுக்கும் இந்தத் தமிழினம்
தரம்தாழ்ந்து கிடக்கும் தமிழ்ப்பள்ளிக்கென்றால்
தயங்கி நிற்கின்றது!
தாய்மொழி பற்றி அக்கறை இன்றி இருக்கின்றது!

நம்மினக் குழந்தைகள் பயிலும்
நற்றமிழ் பள்ளிகள் அடிப்படை வசதிகள் இன்றி
நலிந்ததோர் நிலையில் உள்ளதாம்!
அந்தோ!

அன்புக் குழந்தைகள் அமர்ந்து கற்பதற்கு
இருக்கைகள் பற்றாக் குறையாம்!
இடியும் நிலையில் கூரையாம்!
நினைத்தாலே நெஞ்சம் பதறுகின்றது!
நிலைமையிது தொடர்கதையாகவே இருக்கின்றது!

ஓ! என்தமிழே என்செய்வேன்!

சமயம் - மொழி

அடித்தளம் தாய்மொழியைப் புறந்தள்ளி
ஆரியத்தைப் பின்பற்றி
ஆன்மீகத்தை (சமயம்) அரவணைக்கும் தமிழினம்,
அடையாளம் கெட்டு! ஆளுமையும் கெட்டு!
ஆன்மீகத்தில் சிறந்தென்ன?
அறிவிலே உயர்ந்தென்ன!

காலத்தைக் கடந்து வந்த
கருவூலம் தம் தாய்மொழியைக்?
கட்டிக் காவாது போனால் இந்த இனம்
முன்தோன்றிய மூத்த இனம் ஆயினும்
முகவரி அற்று மூழ்கிப் போகும் திண்ணம்!

கும்பிட்டுக் கொண்டாட கோயிலும்
குடியிருக்க வீடும் இருந்தால் போதும் போலும்
இந்தத் தமிழினத்திற்கு!

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்
துப்புகெட்ட கூட்டமடா!

ஆவணங்கள் - பொதுஅறிவு

பிள்ளை குட்டிகள் உண்டாம்!
பிறப்புப் பத்திரம் மட்டும் இல்லையாம்!
ஆணும் பெண்ணும் உண்டாம்!
அடையாள அட்டையோ இல்லையாம்!
பிறந்து வளர்ந்தது இந்த மண்ணாம்!
பெற்றிருப்பதோ சிவப்பு அடையாள அட்டையாம்!
இப்படியாக இன்னும் எத்தனை எத்தனை அவலங்கள்!
இந்நாட்டுத் தமிழனுக்கு!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...