Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
அன்பைத்தேடி அலைகின்றேன் - மெய்
அன்பைத்தேடி அலைகின்றேன்!

பொன்னும் பொருளும் சேர்ந்தபின்னே
  போற்றி வந்த உறவினையும்
அந்நியம்போல் மதிக்கின்ற
  அறிவுகெட்ட உலகமிதில்!

                அன்பைத் தேடி...

பொருள்படைத்த காலத்தில்
  போற்றி புகழ்ந்தே உறவாடி
உரிய தெல்லாம் இழந்தபின்னே
  ஒட்டம் பிடிப்பார் வாழும் மண்ணில்!

                அன்பைத் தேடி...

பெற்று வளர்த்த அன்னையையும்
 பேணிக் காக்க மறுக்கின்ற
கற் றறிந்த மூடர்கள்!
 காணு மிந்தக் குவலயத்தில்

                அன்பைத் தேடி...

உதவி செய்த நல்லவர்க்கும்
  ஊறு செய்ய நினைக்கின்ற
இதய மில்லாப் பாவியர்கள்
  இருக்கு மிந்தப் பூமியிலே

                அன்பைத் தேடி...

அன்பின் உருவாய்த் திகழ்கின்ற
  அரியர் உறவைப் புறக்கணித்துப்
பொன் படைத்த மானிடரைப்
  போற்று மிந்த நிலவுலகில்

                அன்பைத் தேடி...

அன்பே சிவமெனறு ஓதியநம்
  ஆன்றோர் வாக்கைத் தள்ளிவிட்டுத்
துன்பக் கடலில் வீழ்நதழியும்
  தூய்மை கெட்ட இப்புவியில்
                அன்பைத் தேடி...

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...