Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
தீக்குளித்துத் தீய்ந்தபோதும்
தீர்வொன்று கிடைக்கவில்லை!
மாக்களென்று நினைத்தாரோ
மடியும்தமிழ் உறவுகளை?

உண்ணா நிலையிருந்தும்
உடல்நொந்து உயிர்விட்டும்
கண்ணாலும் காணவில்லை
காந்திவழி வந்தவர்கள்!

பேரணிகள் நடத்தினோம்
பிறக்கும்ஒரு நீதியென்று!
யாரணிகள் நடத்தியென்ன?
எவர்மதித்தார் நம்முணர்வை?

அவனியெங்கும் ஆர்ப்பாட்டம்
அங்கங்கும் நடத்திவந்தோம்!
கவனஈர்ப்பும் செய்துவந்தோம்!
கண்டவர்க்கு இதயமில்லை!

பூர்வீக இனமின்று
புலம்பெயர்ந்து வாழ்கின்றோம்!
யார்வாழ்வை நாம்கெடுத்தோம்?
ஏன்நமக்கு இந்தநிலை?

அதர்மம்தலை விரித்தாட
அங்கு தர்மம் இறங்கவில்லை
கதர்அணிந்த காந்திவழி
கைகொடுக்குமோ அறியோம்!

தினதினமும் தமிழனங்குச்
செத்தொழியும் நிலைதெரிந்தும்
மனிதநேயக் காவலர்கள்
மௌனிக்கும் பொருளென்ன?

தமிழினத்தின் காவலர்கள்
தன்னலத்தைப் பேணியதால்
உமிழ்ந்துவிட்ட எச்சிலுக்கு
ஒப்பாகிப் போய்விட்டார்!

எதிரிகளின் தாள்பணிந்து
ஈனர்களாய் வாழ்பவர்கள்
உதிர்ந்தமயிர்க்(கு) ஒப்பாகி
உயிர்காக்கும் பேடியர்கள்!

எட்டப்பன் செய்ததொரு
இழிசெயலால், சிங்களவன்
கொட்டத்தைக் காட்டுகின்றான்!
குழிபறித்துக் கொள்கின்றான்!

தம் மதத்தைச் சார்ந்தவர் யார்
தரணியிலே துன்புற்றாலும்
அம்மதத்தைச் சார்ந்தவர்கள்
ஆதரிக்க மறப்பதில்லை!

நம்மதத்தைச் சேர்ந்தவனே
நமையழிக்கத் தொடங்கிவிட்டான்!
எம்மதமும் சம்மதமென்று
ஏமாந்தது இனி போதும்!

சைவமதம் தமிழர்மதம்!
தமிழர்மறை திருக்குறளாம்!
பொய்வளர்த்து பிரிவினையைப்
புகட்டுமொரு மதம்வேண்டாம்

மதம்வேறு பட்டிருக்கும்
வாழும்தமிழ் உறவுகளே!
நிதம்சாகும் தமிழனுக்கு
நீதிகேட்க வாரீரோ?

இனம்காணச் செய்துநம்மை
இப்புவிக்குக் காட்டியவன்
இனமானம் காத்ததமிழ்
ஈழத்துத் தமிழனன்றோ!

எத்தனையோ உயிரிழப்பு!
இன்னல்துயர் பரிதவிப்பு!
இத்தனையும் எவனாலே?
எட்டப்பன் அவனாலே!

நடைமுறைஇவ் வுலகத்தில்
நாம்காணும் நிலையென்ன?
படைபலம்கொண் டவனன்றோ
பாரிதனை ஆள்கின்றான்!

ஒற்றுமையே பலமென்ற
உன்னதத்தைப் பறைசாற்ற
உற்றதொரு தருணமிது
உலகத்தமிழ் உறவுகளே!

ஒட்டுமொத்த தமிழினமே!
ஒன்றுபடு! ஒன்றுபடு!
நட்டுவைக்க நம்கொடியை
நமக்கென மண் வேண்டாமா?

போர்தொடுக்கும் எதிரியெல்லாம்
புறமுதுகிட்(டு) ஓடாரோ?
யார்தடைகள் விதித்திடினும்
ஈழமொன்று பிறக்காதோ?

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...