Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
மானமுள்ள தமிழினமே! - தன்
மானமுள்ள தமிழினமே!

நம்மவரின் மனம்நோக
நற்றமிழைப் புறக்கணிக்கும்
செம்மையில்லா அற்பர்களின்
தீராத திமிரொடுக்க!
              மானமுள்ள தமிழினமே...

எந்தஒரு துறையினிலும்
இழிவுசெய்து நம்மவரை
வெந்துருகச் செய்கின்ற
வீணர்களை அடக்குதற்கு!
              மானமுள்ள தமிழினமே...

புல்லாக எண்ணிநம்மைப்
புண்படுத்தும் பகுத்தறிவே
இல்லாத நீசர்களின்
இறுமாப்பை ஒழிப்பதற்கு!
              மானமுள்ள தமிழினமே...

நந்தமிழை வெறுப்பவன்தான்
நம்மையும் வெறுக்கின்றான்!
இந்தநிலை புரியாமல்
இருப்பதுவும் நமக்கழகோ?
              மானமுள்ள தமிழினமே...

நாமென்ன பேடிகளா?
நாதியற்ற மூடர்களா?
ஏமாளி கூட்டமா?
எருமைகளா? சிந்திப்பீர்!
              மானமுள்ள தமிழினமே...

தடியெடுத்து வாளெடுத்துச்
சண்டையிடக் கோரவில்லை!
இடிமுழக்கம் செய்திடுவோம்!
இந்தநிலை ஒழிந்திடவே!
              மானமுள்ள தமிழினமே...

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...