Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
சமயத்தில் உயர்வுதாழ்வு பேசிடும் நடையர் - நெறியின்
  தன்மையை உண்மையில் அறிந்திடா மடையர்!
சமரச வாழ்வினைப் போற்றிடாக் கடையர் - இத்
  தரணியில் உய்யினும் வீண்கழி சடையர்!

சாதிகள் வேண்டுமென்று அடஞ்செய்யும் புல்லார் - அவர்
  சாத்திரம் ஆயிரம் கற்பினும் கல்லார்!
மாதரை அடிமைபோல் நடத்திடும் பொல்லார் - அவர்
  வண்மையாம் ஆண்மையின் தன்மையே இல்லார்
 
பிறர்குடி கெடுப்பதில் கிஞ்சிற்றும் நாணார் - வாழ்வில்
  பெருமையும் பெற்றியும் அமைதியும் காணார்!
அறவழி நின்றுயிர் வாழ்வினைப் பேணார் - அவர்
   ஆண்டவன் அருளினை இம்மியும் பூணார்!
 
கருப்பென்றும் சிவப்பென்றும் பிரிவினை செய்வார்! - அவர்
  காட்டு விலங்கினுக்கு ஒப்பென உய்வார்!
பொருள்படைத்து அகந்தையில் எளியரை வைவார் - அவர்
  புண்ணியம் இழந்தொரு காலத்தில் நைவார்!
 
மற்றவர் உரிமையைப் பறிப்பதில் வல்லார் - இந்த
  மண்ணிலே என்றென்றும் நிலையென நில்லார்!
கற்றவர் ஆயினும் நல்லசொல் இல்லார் - அவர்
  கல்விஇல் லாதவர் போலவே செல்லார்
 
அடுத்தவர் உயர்வதைச் சகித்திடா அற்பர் - அவர்
  ஆயுள் வரையிலும் கீழ்நிலை நிற்பர்!
கெடுவழி நடப்பதில் விழைந்திடும் சொற்பர் - அவர்
  கேவலம் தன்னுயிர் மானமும் விற்பர்!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...