Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
இத்தனைநாள் இருந்தஇடம் தெரிய வில்லை!
இப்போது குறைதீர்க்க வந்து விட்டார்!
புத்தனையும் மிஞ்சிவிடும் பொறுமை காட்டி
பொட்டலங்கள் வழங்கிடுவார்! புன்னகைப்பார்!
எத்தனையோ வாக்குறுதி வழங்கி நம்மை
இன்பத்தில் ஆழ்த்திடுவார் ஏதும் செய்யார்!
அத்தனையும் அரசியலார் ஆடுகின்ற
ஆட்டமென அறியீரோ எமது மக்காள்!

ஊற்றிலிருந்(து) ஊரிவரும் நீரைப் போல
ஒப்பனையாய்ப் பேசிடுவார்! ஒன்றும் செய்யார்!
சோற்றிலிருந்(து) ஒருநாளும் நாற்று வாரா!
துப்புகெட்ட அரசியலார் சொல்லும் ஈதாம்!
நேற்றிலிருந்(து) இன்றுவரை கண்டதென்ன?
நீரன்றிக் கானலன்றோ காணுகின்றீர்!
மாற்றமொன்று வேண்டுமென ஏங்கும் மக்காள்!
வாக்களிக்கும் உரிமையினைத் தவிர்க்கலாமோ?

பிச்சைகேட் டிரங்குமொரு தலைமையாலே
பெறுவதொன்றும் இல்லாமல் இழந்தீர் எல்லாம்!
உச்சத்தில் அவர்வாழ வாக்களித்தீர்!
உமக்கின்னும் விடிவில்லை சிந்தித்தீரோ?
பச்சோந்தி தலைவர்களின் பேச்சை நம்பி
படுகுழியில் வீழ்ந்ததெல்லாம் போதும்! போதும்!
முச்சந்தி போராட்டம் எல்லாம் விட்டு
முற்போக்கை வாக்களிப்பில் காட்டு வீரே!

அருள்படைத்த வள்ளலைப்போல் கருணை காட்டி
அள்ளியள்ளிக் கொடுத்திடுவார் அரவணைப்பார்!
ஒருசிலநாள் பயன்பெறவே கைகொடுப்பார்!
உரியஇடம் கிடைத்தவுடன் ஒளிந்து கொள்வார்!
இருள்படைத்த ஏழையரின் வாழ்வை மட்டும்
இழுபறியில் தள்ளிடுவார்! ஏங்க வைப்பார்!
தெருவினில்சென்(று) அமைதிவழி நீதி கேட்டால்
சிறைக்குள்ளே தள்ளிடுவார்! சட்டம் என்பார்!

ஒன்றென நாம் இந்நாட்டுக்குரியர் என்பர்!
உள்ளுக்குள் இருப்போர்கள் வேறு செய்வார்!
அன்றென நாம் எதிர்க்கும் ஒரு நச்சு நூலை
ஆதரித்துப் பள்ளிக்குப் பரிந்துரைப்பார்!
தொன்றுதொட்டுத் தொடரும் தமிழ்ப்பள்ளிக்(கு) என்றால்
சுணங்கியபின் சொற்பமென நிதியளிப்பார்!
வென்றெடுக்கும்வரை நம்மை அணுகி நிற்பார்!
வென்றபின்னே வேம்பென நமை மதிப்பார்!

தேர்தல்வரும் வேளையிலே தீர்மானங்கள்
திட்டங்கள் எனச்சொல்லி மகிழவைப்பார்!
நீர்தலையில் தெளித்ததுபோல் குளிரவைக்கும்
நிலைமாறும் பேச்சுக்குப் பஞ்சமில்லை!
பேர்தெரியா தவரெல்லாம் மேடையேறி
பிளவுபடா ஆதரவு வேண்டி நிற்பார்!
ஊர்தலைமை ஏற்றபின்னே உரைத்ததெல்லாம்
ஊறுக்காய் ஊறவைத்த கதையாய்ப் போகும்!

கோமாளி தலைவர்களால் கொட்டக் கொட்டக்
குனியுமொரு இனமாக வாழ்ந்துவிட்டோம்!
ஆம்! ஆம்! என்(று) அடிபணியும் நம்மவர்கள்
அரசியலில் இருக்கும்வரை நமக்(கு) ஏது ஏற்றம்?
நாமிங்குச் சிறுபான்மை என்ற போதும்
நாடாளும் கட்சியைத் தீர்மானிக்கின்றோம்!
ஏமாளி கூட்டமென எண்ணி நம்மை
ஏய்ப்பவரை வீட்டுக்கு அணுப்பி வைப்போம்!


மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...