Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
தாய்மொழி பற்றின்றி வாழும்
  தரமிலாத் தமிழனே போ! போ!
தாய்மொழிக்கு உயிரையும் கொடுக்கும்
  தன்மானத் தமிழனே வா! வா!

அந்நியர் கலையினப் போற்றி
  ஆடிடும் தமிழனே போ! போ!
கன்னித் தமிழ்கலை போற்றிடும்
  கண்நிகர் தமிழனே வா! வா!

சாதிகள் பேசிடும் அற்ப
சாக்கடைத் தமிழனே போ! போ!
நீதியின் வழியிலே உய்யும்
  நேரிய தமிழனே வா! வா!

அஞ்சியஞ் சியேதினம் வாழ்வில்
  அமிழ்ந்திடும் தமிழனே போ! போ!
துஞ்சி மடிந்த போதினிலும்
  துவண்டிடாத் தமிழனே வா! வா!

விதிபடி வாழ்வென்று சொல்லும்
  வெறுமதி தமிழனே போ! போ!!
மதியினால் விதியினை வெல்லும்
  மறத்தமிழ் மறவனே வா! வா!

காட்டிக் கொடுத்துயிர் வாழும்
  கழிசடைத் தமிழனே போ! போ!
தீட்டிய கத்திபோல் விளங்கும்
  சீரிய தமிழனே வா! வா!!

பொய்க்கதை விரித்திடும் நெறியைப்
  போற்றிடும் தமிழனே போ! போ!
மெய்க் கருத்திலங்கிடும் குறளை
  விரும்பிடும் தமிழனே வா! வா!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...