Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!
ஒற்றுமையே உயிர்மூச்சாய் !
உரிமை ஒன்றே நம்பேச்சாய்!
ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!

சரணங்கள்
சமயம்வேறு பட்டாலும்
சாதியென்ன ஆனாலும்
தமிழரென்ற சிந்தனையில்
தன்மையிலே சரிநிகராய்! ... ஒன்றுடுவோம்...

உரிமைகளைப் பெறுவதற்கு
ஒருகுரலாய் ஒலிப்பதற்கு
சரிசமமாய்ப் பிறரோடு
தலைநிமிர்ந்து வாழ்வதற்கு ... ஒன்றுடுவோம்...

என்றுமிந்த வறுமையினை
இல்லாமல் ஒழிப்பதற்கு
நின்றுநிலை பெறுவதற்கு
நினைத்ததெல்லாம் முடிப்பதற்கு... ஒன்றுடுவோம்...

மக்கள்நலன் ஒன்றினையே
வாழ்வின்பெருங் குறிக்கோளாய்
அக்கறையும் அரவணைப்பும்
அமைந்திருக்கும் அன்பர்களே! ... ஒன்றுடுவோம்...

அச்சமென்ப தில்லையென்ற
அமுதவாக்கை அகத்திலேற்றி
துச்சமென்று துணிவுகொண்டு
தொட்டதெல்லாம் முடிப்பதற்கு! ... ஒன்றுடுவோம்...

துணிவிருக்கும் தோழர்களே!
துணையிருக்கும் தோழியரே!
பணிவிருக்கும் பெரியோரே!
படைதிரண்டு வாருங்கள்! ... ஒன்றுடுவோம்...

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...